Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அணில், புறாக்களை வேட்டையாடிய இருவர் …. வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை …..!!!

நாகையில் அணில், புறாக்களை வேட்டையாடிய 2 பேருக்கு வனத்துறையினர் தலா 4,000 ரூபாய்  அபராதம் விதித்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தம்பிதுரை பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அங்கிருந்த புறாக்களை வேட்டையாடி உள்ளனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை  அலுவலர்கள் புறாவை வேட்டையாடிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் காரைக்கால் அருகே கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவா(20) மற்றும் கார்த்திக்(23) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் புறா, அணில் போன்ற விலங்குகளை  வேட்டையாடியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் சிவா, கார்த்திக் ஆகிய இருவருக்கும் தலா 4,000 ரூபாய் அபராதம் விதித்தனர்

Categories

Tech |