Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு அடையாள அட்டை…. தீவிரமாக நடைபெறும் கள பணி…. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

வேளாண் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் கலெக்டர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தரமான காய்கறி விற்பனைகள் செய்யப்படுகிறதா என, காய்கறிகளின் விலை நிலவரம் குறித்தும், உழவர் சந்தைக்கு நாள்தோறும் எத்தனை விவசாயிகள் காய்கறிகள் எடுத்து வருகின்றார்களா என ஆய்வு செய்துள்ளார். இதில் புதிதாக காய்கறி விற்பனை செய்வதற்கு 40 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மாவட்ட தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் பொறியியல் ஆகிய துறைகளின் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய்தல் விவசாயிகள் வருவே வருகைப்பதிவேடு காய்கறிகள் விற்பனை எடை இயந்திரம் போன்றவை குறித்து ஆய்வு செய்துள்ளார்.

இதனை அடுத்து நாள்தோறும் 100 முதல் 150 விவசாயிகள் வரை கீரைகள், பழங்கள், நாட்டு கோழி முட்டைகள், தேங்காய், பூக்கள் மற்றும் காளான் ஆகியவைகளை நுகர்வோர்களிடம் நேரடி முறையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நாள்தோறும் 1000 முதல் 1500 நுகர்வோர்கள் வரை பழங்கள் மற்றும் காய்கறிகளை நேரடியாக வாங்கி வருகின்றனர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

Categories

Tech |