நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு போராடிக் கொண்டிருக்கும் போது மோடி அரசு இரக்கமில்லாமல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருகிறது. இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது கடுமையான கண்டனத்திற்கு உரியது என்ற ஜோதிமணி எம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.