மக்கள் ஆசி யாத்திரையை பாஜக தொடங்கியுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தொண்டர்களை சந்தித்து வருகின்றனர்.மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசி யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் நேற்று முதல் தொடங்கினார்.
இந்நிலையில் தாராபுரத்தில் நடைபெற்று வரும் எல். முருகனின் இரண்டாம் நாள் மக்கள் ஆசீர்வாத யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜகதான் உண்மையான சமுக நீதியை வலியுறுத்தி வருகிறது. திமுகவினர் பொய்யான சமூகநீதியை பரப்புகின்றன. உண்மையான சமூகநீதியை பாஜகவில் பார்க்கலாம்.வேல் யாத்திரையின் போது தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறாது என்று திமுக கூறி வந்தது. ஆனால், மொடக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது” என்றார்.