இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது .
இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இங்கிலாந்து அணியை 120 ரன்களுக்குள் இந்திய அணிஆல் அவுட் செய்தது . இதில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் ,பும்ரா 3 விக்கெட்டும் ,இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும் ஷமி ஒரு விக்கெட்டும் என இந்திய அணி பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கேப்டன் விராட்கோலி கூறும்போது,” 60 ஓவர்களில் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் ஆக்குவோம் என்ற நம்பிக்கை இருந்தது. எங்களுடைய இரண்டாவது இன்னிங்சில் போது மைதானத்தில் பதட்டமான சில சம்பவங்களும் நடந்தது. அந்த சூழ்நிலை தான் வீரர்களுக்கு உத்வேகத்தை அளித்தது.
இதனால்தான் ஷமியும் , பும்ராவும் பெவிலியன் திரும்பும்போது அவர்கள் இருவரையும் கௌரவிக்கும் விதமாக நாங்கள் எழுந்து நின்று கை தட்டினோம். அவர்கள் இருவரும் சேர்த்த ரன்கள் விலைமதிப்பில்லாதது “, என்று அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில்” கடந்த முறை லாரன்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையிலான அணி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் 60 ஓவர்களில் வெற்றி பெற்றது இன்னும் ஸ்பெஷலாக உள்ளது. அதிலும் குறிப்பாக முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். அத்துடன் வேகப்பந்து வீச்சாளர்களும் முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றினர். எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பையும் கொடுத்தோம் “, இவ்வாறு அவர் கூறினார்.