இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது. இதையடுத்து பல வருடங்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு உங்களுக்கு எல்லாம் ஒரு வருடமாக தான் லாக்டவுன். ஆனால் எனக்கு பத்து வருடமாக லாக்டோன் என்று கூறி கண் கலங்கினார். இதை பார்த்த ரசிகர்களின் வடிவேலுவை எந்த படங்களிலும் பார்க்கவே முடியாதா என்று வருத்தப்பட்ட நிலையில் தற்போது ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது.
ஆமாம்… சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்கிற படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் மேலும் 10 கதைகளில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அது குறித்த அறிவிப்புகள் இனி வரிசையாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வடிவேலு தெரிவிக்கையில், ” இனி நீங்கள் என்னை படங்களில் அடிக்கடி பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.