Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே கவனமா இருங்க…. “நீர் விளையாடேல்” வேண்டாம்… காவல்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் தற்போது நிரம்பி  வருகின்றன. இதனால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பக்கத்தில் உள்ள ஆறு, குளம் ஏரிகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம் என்று காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளுக்கு குளிக்க செல்லும்போது ஆழம் தெரியாமலோ அல்லது விளையாடுவதனாலோ தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள நேரிடலாம் .அதனால் பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான செய்தியையும் தற்போது மேற்கோள் காட்டியுள்ளது.

Categories

Tech |