Categories
தேசிய செய்திகள்

அணைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டம்….. எது தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை கேரளாவின் வயநாடு பெற்றுள்ளது. மே மாதம் முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், வயநாட்டில் இதுவரை 6.16லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |