சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் காவல்துறையினர் பள்ளிபாளையம் பேருந்து நிலைய 4 ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில் ஒருவர் சந்தேகபடுபடி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தை சேர்ந்த வடிவேல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த பையில் 37 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் வடிவேலை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.