ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரீபியன் தீவான ஹைதியில் கடந்த சனிக்கிழமை ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கமானது ஹைதியின் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் போட்டாஸ் பிரின்ஸ் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதால் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவம், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே பிரதமர் ஏரியல் ஹென்றி ஒரு மாதத்திற்கு அவசரகால அறிவித்துள்ள நிலையில், நிலநடுக்கத்தினால் 5,700 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பலர் தனது உறவினர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.