Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட சாலை விபத்து…. 21 பேர் பலியாகிய சோகம்…. போலீசாரின் அதிரடி விசாரணை….!!

பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் ஜிகாவா நகரில் ரடாபி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் வழியாக ஒரு லாரி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மீட்பு குழுவினர் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |