Categories
சினிமா மாநில செய்திகள்

“சார்பட்டா பரம்பரை”… பா. ரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக..!!

உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடம் பரப்புவதாகக் கூறி சார்பட்டா இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படக் குழுவினரை நடிகர் கமலஹாசன் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்..

Sarpatta Parambarai Movie Review: Ranjith's love letter to Ekalavya makes  for compelling viewing- Cinema express

இந்நிலையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடம் பரப்புவதாகக் கூறி சார்பட்டா இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பிட்ட வசனத்தை நீக்கி படத்தை மறு வெளியீடு செய்யாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது..

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இப்படம் திமுக பிரச்சாரப்படம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |