ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் நகரின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தலீபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அரண்மனைக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே ஜனாதிபதி அஷ்ரப் கனி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்களின் கைக்கு ஆட்சி மாறியது.
காபூல் நகரின் எல்லையை தலிபான்கள் சூழ்ந்திருந்த நிலையில், அவர்களை நகருக்குள் செல்ல தலிபான்களின் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதன்பின்பு தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தனர். நகர் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. எனவே பல மக்கள் காபூலை விட்டு தப்பிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
کابل ښار تر مدیریت لاندې دی، د اسلامي امارت ځانګړي قطعات د امنیت د تأمین په موخه د ښار په مختلفو برخو کې ځای پر ځای شوي.
عام خلک د مجاهدینو په ورتګ خوښي ښیي او له امنیت څخه راضي دي. pic.twitter.com/kr6i5jkhLk— Zabihullah (..ذبـــــیح الله م ) (@Zabehulah_M33) August 16, 2021
இந்நிலையில் தலிபான்கள், ஆட்சியை கைப்பற்றியது தொடர்பில், மக்களிடம் கருத்து கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் காபூல் நகர் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க இஸ்லாமிக் எமிரேட்ஸின் சிறப்பு படை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட தொடங்கியுள்ளது.
எங்களின் வருகையால் மக்கள் மகிழ்வடைகிறார்கள். மேலும், நாங்கள் வழங்கும் பாதுகாப்பால் மக்கள் நிம்மதி பெற்றிருக்கிறார்கள் என்று வீடியோவில் தெரிவித்துள்ளனர்.