17 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் அபிஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் வசிக்கும் 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிஷேக் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாளையங்கோட்டை தாலுகா அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை தாலுகா அனைத்து மகளிர் காவல்துறையினர் அபிஷேக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.