Categories
Uncategorized பல்சுவை

பண்டிகைக்கால சிறப்பு திட்டம்: ஈஎம்ஐ மூலம் பொருட்கள் வாங்க…. சூப்பரான வாய்ப்பு…!!!

கோடக் மகேந்திரா வங்கியானது ஸ்மார்ட் ஈஎம்ஐ என்ற பெயரில் பண்டிகை கால சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ,டிஜிட்டல் குரோம் உள்ளிட்ட 27,000 விற்பனை தளங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் ஷாப்பிங் செய்யலாம். வாங்கும் பொருளுக்கு ரூ.5000 செலுத்தி அதற்கு மேற்பட்ட தொகையை ஈஎம்ஐ  மூலமாக செலுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பான் கார்டு, ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் போன்ற ஏதேனும் ஒரு அடையாள ஆவணங்களில் ஒன்று இருந்தால் போதும்.

KYC விவரங்கள் சரிபார்ப்பு செய்யப்பட்டு தகுந்த வாடிக்கையாளர்களுக்கு மேற்கூறிய சலுகைகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பக்கத்தில் உள்ள கடைகளுக்கு சென்று அங்கு கோடக் மகேந்திரா வங்கியின் ஈஎம்ஐ வசதிகள்  ஒப்பந்தம் செய்யப்படுள்ளதா? என்பதை  தெரிந்துகொண்டும், நெட் பேங்கிங் வசதி மூலம் தங்களுக்கான இஎம்ஐ சலுகை எவ்வளவு? என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |