Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆலயத்திற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெஸ்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு ஜெஸ்சி கோவைப்புதூரில் இருக்கும் ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஜெஸ்சி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |