நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது போக்குவரத்து, மலைப் பிரதேசங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுவதை காண முடிகிறது. இந்த விஷயத்தில் மாநில அரசு தலையிட்டு விதி மீறல்களின் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.