ஜெர்மனியில் ஒரே நாளில் 5,578 பேருக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதன் பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஜெர்மனியில் ஒரே நாளில் 5,578 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட இந்த பாதிப்பு ஜெர்மனியில் ஒரு மாதத்தில் உறுதியான கொரோனா தொற்றை விட 5 மடங்கு அதிகமாகும்.