Categories
சினிமா

படப்பிடிப்பு தளத்தில் காயம் அடைந்த…. நடிகர் அருண் விஜய்….!!!!!

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.

மேலும் ஒரு மணி நேர ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாகவும், காயமடைந்ததால் உடற்பயிற்சியை அடுத்த ஐந்து நாட்களுக்கு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் பதிவு செய்து இருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார், புகழ், அம்மு அபிராமி மற்றும் ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

Categories

Tech |