Categories
தேசிய செய்திகள்

என்னயவா கடிச்ச.. இரு ஒன்னய…. ஆஹா இதுவல்லவா ரிவன்ஞ்ச்…..!!!

ஒடிசாவில் கடித்த பாம்பை தனது வாயால் விவசாயி ஒருவர் கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டம் சாலிஜங்கா பஞ்சாயத்திற்கு உட்பட்ட கம்பிர்பாதியா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின விவசாயி பத்ர் (45). இவர், தனது நெல் வயலில் இரவு நேரத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அவரது காலில் ஏதே கடிப்பது போன்று உணர்ந்தார். கீழே குனிந்து பார்த்த போது பாம்பு ஒன்று கடித்துவிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பிறகு தனது கையில் வைத்திருந்த லைட்டை அடித்து பார்த்த, கடித்தது விஷமிக்க பாம்பு என்பது தெரியவந்தது. பின்னர் அவர் தனது கையால் அந்த பாம்பைப் பிடித்து, தனது வாயால் மீண்டும் மீண்டும் கடித்து அதே இடத்தில் கொன்றார். அதிர்ஷ்டவசமாக, பாம்பிடம் கடி வாங்கிய அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாம்பிடம் கடி வாங்கிய பத்ர், பாம்பை கடித்து கொன்ற சம்பவம் அவரது கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |