தமிழ்நாடு காவல் துறை பணியாளர்கள் மற்றும் காவல் துறை அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகள் அரசு மற்றும் தனியார் துறையில் வேலையில் சேர்வதற்கு உதவும் வகையில் காவல்துறையினர் பிரிவின்கீழ் “காவல் பணியாளர்கள் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்பு பரிமாற்றம்” என்று புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மூலம் காவல் துறை பணியாளர்கள் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மட்டுமல்லாமல் அவர்களின் குழந்தைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை இந்த பிரிவு வழங்கும்.
இதனால் தங்களுக்கு ஏற்ற வேலையைத் தேடுவதில் பிள்ளைகளுக்கு இருக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பமுள்ள காவல் துறை பணியாளர்கள் தங்களுடைய குழந்தைகள் பற்றிய விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் சேகரித்து ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.