Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விவேக்கின் கடைசி காமெடி ஷோ… புரோமோவை வெளியிட்டு சூர்யா நெகழ்ச்சி…!!!

நடிகர் விவேக் கலந்துகொண்ட கடைசி காமெடி நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த விவேக் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரது மறைவு திரை பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்  கடைசியாக விவேக் இந்தியன்-2, யாதும் ஊரே யாவரும் கேளிர், அரண்மனை-3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது தவிர இவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து தொகுத்து வழங்கிய லொல் எங்க சிரிங்க பார்ப்போம் என்கிற ரியாலிட்டி ஷோ அமேசான் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது.

இதில் சதீஷ், பவர் ஸ்டார், பிரேம்ஜி, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘அவர் எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழ்வார். நடிகர் விவேக் அவர்களின் கடைசி படைப்பை பகிர்ந்து கொள்வது ஒரு கௌரவம்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |