ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு 2022 ஆண்டு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றிற்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் கடலை அடைந்து நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை பெரிதும் பாதித்து வருகின்றது. இதனால் இந்தியாவில் 2022ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி, இறக்குமதி, வினியோகம், தேக்கி வைத்தல் போன்றவைக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய கோப்பைகள், தட்டுகளும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதில் காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் க்ரீம் கப்புகள், ஸ்ட்ரா, ஸ்பூன் போன்றவைகளும் அடங்கும். தமிழகத்தில் ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.