இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும், இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாட்டில பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்கள் இவற்றை பயன்படுத்திக்கொண்டு பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் புதிய உருமாறிய டெல்டா பிளஸ் தொற்று பரவி வருவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயது பெண்மணி உயிரிழந்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் இரண்டாவது தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது குடும்பத்தினரில் இருவர் டெல்டா பிளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.