சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் ட்விட்டர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வந்தனர். இதனால் ட்விட்டர் இந்தியா தலைவர் மனீஷ் மகேஸ்வரி தனது பதவியில் இருந்து விலக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு இடம் மாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் அக்கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது.
இதனை கண்டித்து “எங்கள் இந்திய அரசியலில் ட்விட்டர் தலையிடுவதா?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். அதுமட்டுமில்லாமல் ட்விட்டர் இந்தியாவிற்கும், இந்திய அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில், ட்விட்டர் இந்தியாவின் தலைவர் மனீஷ் மகேஸ்வரி அமெரிக்காவிற்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். மேலும் ட்விட்டர் இந்தியா ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.