தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் பெற்றுள்ள பயனாளிகளின் விவரங்களை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் வழங்க அனைத்து கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயனாளிகளின் கேஒய்சி ஆவணங்கள் மற்றும் குடும்ப அட்டை விவரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. மேலும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தரப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்வது அரசின் முன்னுரிமை ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.