பணம் கேட்டு டார்ச்ச்ர் செய்த மகனை அவரது தந்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடாக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோணிபீடு கிராமத்தை சேர்ந்த விவசாயி லட்சுமணன்(72). இவரது மகன் கிரண்(32). லட்சுமணனுக்கும், கிரணுக்கும் பணப்பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் கிரண், லட்சுமணனிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே சண்டை முற்றியது.
அப்போது ஆத்திரம் அடைந்த லட்சுமணன் வனவிலங்குகளை விரட்ட வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மகனின் தலையில் சுட்டார். இதில் கிரண் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோணிபீடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோணிபீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர்.