ஆடிமாதத்தில் வாங்கும் எந்த ஒரு மங்கள பொருளும், பல மடங்கு நன்மைகளையும், சுபீட்சத்தையும் அள்ளிக்கொடுக்கும். இன்றைய தினம் ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை. இந்த ஆடிவெள்ளியில் இந்த பொருளை நீங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள். இந்தப் பொருள் ஏற்கனவே வீட்டில் இருந்தாலும் கூட பரவாயில்லை. இன்றையதினம் வாசனைப் பொருட்களை வாங்குவது மிக நல்லது. அதனுடன் அரிசி வாங்கி வைப்பது மிகவும் நல்லது.
அன்னபூரணியை ஆடி கடைசி வெள்ளி அன்று வாங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் இருக்கும் வருமானப் பற்றாக்குறை நீங்கி, வறுமை அகன்று செல்வமானது பன்மடங்கு உயரும், பெருகும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் உங்களிடம் அரிசி இருந்தால் கூட ஒரு கிலோ அரிசியை வாங்கி அன்றைய நாளில் அதை வைத்து சமைத்து அம்பாளுக்கு நெய்வேத்தியம் செய்தால் மிகவும் நல்லது.