Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு – தமிழக அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 102.49 க்கு இன்று விற்பனையாகிறது. இதனால் பெட்ரோல் விலையை குறைக்குமாறு பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதனை தாக்கல் செய்து வருகிறார். அவருடைய பட்ஜெட் உரையில்,  தமிழகத்தின் பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ரூ.100க்கு கீழ் பெட்ரோல் விலை மீண்டும் குறைகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |