நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகின்றது. இதில் இணையும் பணியாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்த திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியமும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் 2020 -2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதனை தாக்கல் செய்து வருகிறார். அவருடைய பட்ஜெட் உரையில், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும் என்றும், அதன் ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.