தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உதவி தலைவரான ராஜேஷ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட குழு உறுப்பினரான அம்மணி அம்மாள் மற்றும் மாவட்ட உதவி தலைவரான மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் ரயில்வே சலுகையை பறிக்கக் கூடாது எனவும் ரயில் நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க கூடாது எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செந்தில்குமார் நன்றியுரை வழங்கியுள்ளார்.