நாகையில் திருக்குவளையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரடி பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது .
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தப் பொறியியல் கல்லூரியில் உள்ளூர் ,வெளியூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவ ,மாணவிகள் படித்து வருகின்றனர் .மேலும் வெளியூரை சேர்ந்த ஆசிரியர்களும் இந்த கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பொறியியல் கல்லூரி திருக்குவளை பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கிருந்து கல்லூரி வளாகத்திற்கு மாணவர்கள் ,பேராசிரியர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்ததால், மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கல்லூரிக்கு நேரடியாக அரசுப் பேருந்து போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின்-க்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி நாகை, திருவாரூர் ,வேதாரண்யம் ,திருத்துறைப்பூண்டி உட்பட பகுதிகளில் இருந்து திருக்குவளைக்கு இயக்கப்படும் பேருந்துகள் நேரடியாக பொறியியல் கல்லூரிக்கு செல்லும் வகையில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கல்லூரி வளாகத்திற்கு நேரடியாகப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது .அதன்படி கல்லூரியில் இருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தை கல்லூரி புலமுதல்வரான துரைராசன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார் .அத்துடன் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு கல்லூரி மாணவ ,மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.