Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஊரடங்கில் தளர்வு… வெளியான அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 15 முதல் சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில், அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால், ஊரடங்கில் தளர்வாக ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இரவு 10 மணி வரை அனைத்து நாட்களிலும் கடைகள் இயங்க அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 200 பேர் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. உடற்பயிற்சி நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது. அரசியல், கலாச்சாரம், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கின்றது.

Categories

Tech |