கொரோனாவால் உயிரிழப்பதை தடுப்பதற்காக அடுத்த கட்ட ஆய்வுக்கு 3 மருந்துகளை உட்படுத்த போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளை சார்ந்த துறைகளும் அயராது தங்களுடைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி உலக சுகாதார அமைப்பும் கொரோனாவை விரட்டியடிக்க 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்த ஆராய்ச்சிகளில் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவை பயனுள்ளதாக அமைகிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி ஏற்கனவே 4 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவைகள் கொரோனாவுக்கு எதிராக பயனற்றவை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இன்பிளிக்சிமேப், மற்றும் ஆர்டிசுனேட், இமடினிப் போன்ற 3 மருந்துகளை உலக சுகாதார அமைப்பு அடுத்தகட்ட ஆய்வுக்கு உட்படுத்த போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மருந்துகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.