தல, தளபதி நேரில் சந்தித்து ஒன்றாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனான நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் ஐபிஎல் போட்டி விரைவாக தொடங்கப்பட உள்ள நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் அருகருகே நடைபெற்றுள்ளது.
அங்கு நடிகர் விஜய்யும், கிரிக்கெட் வீரர் தோனியும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.