ரயில்வே துறையில் பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பாக அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் இணைந்து உரிமைகளுக்காக சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் துளசிமணி, லட்சுமணன், மாரியப்பன், சுசீலா, இளங்கோ, வெங்கடாச்சலம், இடும்பன் போன்றோர் கோரிக்கைகள் பற்றி விளக்கி பேசியுள்ளனர். அதன்பின் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ஆர்ப்பாட்டம் பற்றி வாழ்த்தி பேசியுள்ளார். இதனைப் போல் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க அரூர் குழு சார்பாக மொரப்பூர் அமைந்திருக்கும் ரயில் நிலையத்தின் முன்பாக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கியுள்ளார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிசுபாலன், சர்மிளா, உதயகுமார், மேகனா போன்றோர் முன்னிலை வகித்துள்ளனர். இதில் நிர்வாகியான கோவிந்தம்மா வரவேற்றுள்ளார். இதனையடுத்து மாவட்ட பொறுப்பாளரான மாரிமுத்து மற்றும் அரூர் வட்டச் செயலாளரான வேடியப்பன் போன்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து எல்லா வகையான மாற்றுத்திறனாளிகளின் சங்கத்தின் சார்பாக ரயில் நிலையத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் செட்டியப்பன் தலைமை தாங்கியுள்ளார்.
இதில் செயலாளர் திம்மன், வட்டத் தலைவர் கிருஷ்ணன், கிளை தலைவர் நாகராஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கையை முன் வைத்து கோஷங்களை எழுப்பியுள்ளனர். பிறகு மாற்றுதிறனாளிகள் அவற்றில் ஏற்கனவே பெற்று கொண்டிருந்த ரயிலின் கட்டண சலுகைகள், பயணங்கள் பறிக்கப்பட்டதை திரும்ப அளிக்க கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாதாரணமான காலத்தை விட கூடுதலாக கட்டணம் செலுத்தி அவசர தேவைக்காக பயணிக்க வேண்டிய நிலைமையில் இருப்பதால் அதை ரத்து செய்யுமாறு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் பயன்பாட்டிற்கு திரும்பவும் திறக்குமாறு அவர்கள் கோரிக்கை செய்துள்ளனர். மேலும் புதுச்சேரி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியத்தில் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பி உள்ளனர்.