நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான செல்வந்தர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன. இதில் சில வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வரித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் காலதாமதம் ஆகிறது.
ஆனால் அதிகாரிகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் அரசு சரியாக ஊதியம் வழங்குகிறது. சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா? வரி வசூலிக்கும் பணியில் உள்ள அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால், அரசை நடத்த முடியாது. எனவே, சொகுசு கார் நுழைவு வரி தொடர்பான அனைத்து வழக்குகளின் விவரங்களையும் வணிக வரித்துறை ஆணையர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட படும் என எச்சரித்துள்ளார்.