Categories
மாநில செய்திகள்

உப்பை திண்றவன்…. தண்ணி குடிச்சே ஆகணும்…. அமைச்சர் சேகர் பாபு பதிலடி…!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இந்நிலையில் இதற்கு அதிமுக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு சோதனை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக கண்டனம் தெரிவித்து உள்ளதே என்ற கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

அதன்படி உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். எஸ்பி வேலுமணி  தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றம் சென்று அதை நிரூபிக்கட்டும். அதிமுக அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய தவறிவிட்டது . மடைமாறி சென்றவர்களை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |