வேலூர் மாவட்டத்தில் தெருக்கூத்து கலைஞர் ஒருவர் நடித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரான கமலநாதன்(52) தெருக்கூத்து கலைஞர் ஆவார். இவர் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அர்ஜுனஜ் வேடமணிந்து ஆடிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று கீழே சுருண்டு விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்த நிலையில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.