கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Keep inspiring us sir 🙏#62YearsOfKamalism pic.twitter.com/Sr4PH6vNZd
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 11, 2021
இந்த படத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் 62 ஆண்டுகள் சினிமா பயணத்தை வாழ்த்தும் விதமாக விக்ரம் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் கையில் பெரிய வாளுடன் கமல் மிரட்டலான லுக்கில் இருக்கிறார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது .