Categories
ஆன்மிகம் இந்து

குழந்தை வரம் தரும் ஆடிப்புரம்….. இப்படி வழிபாடு செய்யுங்க… நல்ல பலன் கிடைக்கும்….!!!

ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரம் உச்சம் பெறும் நாளையே ஆடிப்பூரம் என்று நாம் கூறுகிறோம். அந்த அற்புதமான ஆடிப் பூரம் நாளில் அம்மனுக்கு வளையல் சாத்தி நாம் வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சிலர் செல்வ செழிப்புடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கும். திருமணமான மூன்று ஆண்டுகளில் ஒரு குழந்தை பிறந்திட வேண்டும். அப்பொழுதுதான் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

இப்படி குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகள் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு பூஜை செய்தால் மிகவும் நல்லது. குழந்தை வரம் கிடைக்கும். ஆடிப்பூரம் நாளில் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, குங்கும காப்பு, சந்தனக்காப்பு போன்றவற்றை சாத்தி வழிபாடு நடத்துவார்கள். இந்த நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்படும் வளைகாப்பில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுப்பதால் நல்ல பலன்கிடைக்கும். வெகுநாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகள் வீட்டிலேயே முறைப்படி சந்தனம், குங்குமம் நலங்கு வைத்து பெண்ணின் இரு கைகளிலும் வளையல் அணிவித்து வளைகாப்பு செய்வதால் அடுத்த ஆண்டே குழந்தை உங்கள் இல்லத்தில் தவழும்.

Categories

Tech |