முன்னணி நடிகர் அஜித்தின் ரீல் மகள் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா. இப்படத்தைத் தொடர்ந்து அவர் விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.
அதன் பின் குழந்தை நட்சத்திரமான அனிகா ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி அதை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை அனிகா தெலுங்கில் உருவாகும் புட்ட பொம்மா எனும் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.