Categories
உலக செய்திகள்

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ…. அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்…. 42 பேர் பலியாகிய சோகம்…!!

காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்ஸ் ஆகும். அந்த நகரில் கடந்த திங்கட்கிழமை அன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயானது அங்கு உள்ள காட்டுப்பகுதி முழுவதும் மிகவேகமாக பரவியுள்ளது. இதனால் அதிகப்படியான கரும்புகை உருவாகி அப்பகுதி முழுவதும் இருளாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.  மேலும் அப்பகுதியில் வாழும் மக்களும் வாலிகளில் தண்ணீர் கொண்டு வீசி மற்றும் மரக்கிளைகளை பயன்படுத்தி  தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் வேகமாக பரவி வருகின்றது.  இதில் ஏராளமான வீடுகள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சர் கமல்பெல்ட்ஜவுட் கூறுகையில் ” இந்த தீ விபத்துக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கும் விசாரணையை தொடங்குங்கள். ” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த தீவிபத்தில் 25 தேசிய பாதுகாப்பு படையினர் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக  அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் அல்ஜிரியாவில் உள்ள டிஸி ஓசோ மாகாணத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதை அரசாங்கம் முன்னதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த காட்டுத்தீ குறித்து அந்நாட்டு பிரதமர் அய்மான் பெனாப்டெர்ரஹ்மானே கூறுகையில் ” தேசிய பாதுகாப்பு படையினர் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தனக்கு வேதனையை அளித்துள்ளது. குறிப்பாக விமானங்களை வாடகைக்கு எடுக்கவும் தீயை அணைக்கும் செயல்பாடுகளை வேகப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்.” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |