தேசிய மருந்துகள் விலைக் கொள்கை 2012, மருந்துகளின் விலைகளை ஒழுங்கு படுத்துவதற்காக வழிகாட்டுதல்களை பரிந்துரை செய்கிறது. மருந்துகள் துறையின் கீழ் செயல்படும் தேசிய மருந்துகள் விலை ஆணையம் புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சைக்கான திட்டமிடப்பட்ட மருந்துகளுக்கான உச்சவரம்பை நிர்ணயம் செய்கிறது. மேலும் திட்டமிடாத மருந்துகளின் விலையும் கண்காணித்து வருகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான 42 திட்டமிடாத மருந்துகளின் விலகி உச்சவரம்பை என் பிபிஏ நிர்ணயம் செய்திருக்கிறது.
அதன்படி 526 பிராண்ட் மருந்துகளின் விலை 90 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மக்கள் மருந்தகம் சுகம் செயலியில் மருந்துகளின் விலை விபரங்கள், மருந்துகளின் விலை ஒப்பீடு, அருகில் உள்ள மக்கள் மருந்தகங்கள் உள்ளிட்ட விபரங்கள் உள்ளன. தமிழகத்தில் 13,074 பேர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.