கும்பம் ராசி அன்பர்களே.! சொந்த பந்தங்களின் வருகை இருக்கின்றது.
இன்று வாழ்க்கையில் உங்களுக்கு சில கோரிக்கைகள் வந்து சேரும். தொழில் மாற்றம் இடமாற்றம் போன்ற நிகழ்வுகள் நடக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்ரம ஆரம்பிக்க இருப்பதினால் சில காரியத்தில் கவனமாக ஈடுபட வேண்டும். மனதில் குழப்பங்கள் உருவாகிவிடும். தேவையில்லாத பிரச்சினைகளை பெரிதுபடுத்த வேண்டாம். பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். அனைவரிடமும் அன்பாக பேச வேண்டும். முன் கோபங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். யாரிடமும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. சொந்த பந்தங்களின் வருகை இருக்கின்றது.
செலவுகள் கூடும். அதிகப்படியான உழைப்பினால் பணவரவுகள் சீராகும். கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரணை வேண்டும். அப்பொழுதுதான் நன்மை கிடைக்கும். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும். காதலில் உள்ளவர்கள் பக்கமாக நடந்து கொள்ள வேண்டும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான முயற்சியில் கொஞ்சம் குழப்பங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது கருநீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் கருநீலம்