Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடுகளை முற்றுகையிட்ட யானைகள்…. அச்சத்தில் தவிக்கும் பொதுமக்கள்…. நீலகிரியில் பரபரப்பு….!!

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் மச்சிகொல்லி பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு, வாழை, தென்னை போன்ற மரங்களை நாசப்படுத்தியுள்ளது. இதனையடுத்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் காட்டு யானை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மொபட்டை தந்தத்தால் முட்டி  சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |