மெட்ரோ சிரிஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிஸ்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான மெட்ரோ படத்தின் மூலம் அறிமுகமானவர் சிரிஷ். தற்போது இவர் இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ள பிஸ்தா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அருந்ததி நாயர், மிருதுளா முரளி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரபல நகைச்சுவை நடிகர்கள் செந்தில், யோகி பாபு, சதீஷ், நமோ நாராயணா ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஒன் மேன் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பிஸ்தா படத்தின் கலகலப்பான டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.