Categories
சினிமா தமிழ் சினிமா

‘கொம்பன்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் கார்த்தி?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் கார்த்தி மீண்டும் முத்தையா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் குட்டி புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் இதைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் வெளியான கொடிவீரன், தேவராட்டம் போன்ற படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை.

Karthi to team up once again with Muthaiah?- Cinema express

இந்நிலையில் முத்தையா மீண்டும் கார்த்தியை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதன் பின் இவர் முத்தையா இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும் இதை தொடர்ந்து கார்த்தி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |