Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விதிமுறைகள் மீறப்பட்டதா….? படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக கூறி சிவகார்த்திகேயன் பட குழுவினருக்கு அதிகாரிகள் 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் படபிடிப்பை பார்ப்பதற்காக அப்பகுதிக்கு சென்றனர். இந்நிலையில் பொது மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அப்பகுதியில் கூட்டமாக நின்றதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படப்பிடிப்பை நிறுத்தியதோடு பொதுமக்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக அதிகாரிகள் படக்குழுவினருக்கு 19 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி உட்பட படக்குழுவினர் 31 பேர் மீது ஆனைமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |