Categories
சினிமா தமிழ் சினிமா

ஹன்சிகா நடிக்கும் புதிய படம்…. தெறிக்கவிடும் போஸ்டர்…. இணையத்தில் ட்ரெண்ட்….!!!

நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. இவரது கொழுகொழு கண்ணத்திற்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக நடிகை ஹன்சிகா தனது உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு சில நாட்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

அதன் பிறகு நடிகை ஹன்சிகா பட வாய்ப்பிற்காக மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘ஒன் நாட் 5 மினிட்ஸ்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகை ஹன்சிகா தலையில் காயத்துடனும், கையில் விலங்குடனும் இருக்கும் இந்த தெறிக்கவிடும் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

hansika-next-movie

Categories

Tech |